சில காலமாகவே தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிக்கொண்டே உள்ளன. அதில் விஸ்வரூபம் மற்றும் கடல் படத்திற்கு அடுத்தார் போல் மடிசார் மாமி என்ற பெயரினை கொண்ட இத்திரைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த திரைப்படத்தின் பெயருக்கு தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதியரசர் திரு கிருபாகரன் அவர்கள். மேலும் தனக்கு சமூகத்தில் உள்ள பொறுப்புணர்வையும் காட்டியுள்ளார்.
திரைப்படங்களின் பெயர்களிலேயே கண்ணியத்தை தர முடியாத போது அந்த திரைப்படம் எவ்வாறு சமூக பொறுப்புடன், சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கும் என்பதே நீதியரசரின் ஆதங்கம். எந்த ஒரு சமூகத்தினரையும், மதத்தினரையும் கொச்சைப்படுத்தாமலும், புண்படுத்தாமலும் திரைப்படங்களின் பெயர்களை வைக்ககூடாதா? என்ற இவரின் கேள்வியே இவரின் சமுக அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தீர்ப்பு மட்டும் வழங்குவது தனது வேலை என்று இல்லாமல் சமூக பார்வையுடன் செயல்பட்டு தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார் . வருங்காலங்களில் திரைப்படத்தின் பெயரே அப்படத்தின் நன்மதிப்பையும் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மதிப்பை உலகறிய செய்யுமாறு இருக்கவேண்டும் என்பதே இவரின் கோரிக்கை.
கடந்தகாலங்களில் பல வெற்றி படங்கள் அதன் பெயர்களின் மூலமாகவே மக்களை அதிகளவில் கவர்ந்து வெற்றிபெற செய்தது. அத்திரைப்படங்களின் மூலமாக மக்களின் நன்மதிப்பை பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்துள்ளனர், இருக்கின்றனர். திரைப்பட உலகின் மூலமாக 5 முதல்வர்களை தந்த திரைத்துறை இன்று தடம்மாறியும் தடுமாறியும் உள்ளது. இந்நிலை மாறவேண்டும் எந்த மக்களையும் புண்படுத்தாத சமூக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் எந்த வகையிலும் பாதிப்பு வராத படங்களை தரவேண்டும். திரைப்படங்கள் வியாபர நோக்கில் எடுக்கப்பட்டாலும் அத்திரைப்படங்கள் சமூகத்தை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு சமூக பொறுப்புடன் செயல்பட்ட இவருக்கு நமது பாராட்டுக்கள்.
பல புரட்சிகளை திரைப்படத்தின் மூலம் செய்த N S கிருஷ்ணன் முதல் எம் ஜி ஆர் வரை தாங்கள் நினைத்ததை திரைப்படங்கள் மூலம் நிகழ்த்தினார்கள். அவர்களின் படங்களிலும், பட தலைப்புகளிலும் யாரையும் புண்படுத்தாத வகையில் சமூக சீர்திருத்த கருத்துகளை மக்களிடையே சென்றடைய செய்தனர். இக்கருத்துகளால் பல முன்னோக்கிய சிந்தனைகளும், சமூக தெளிவும் பிறக்க காரணமாயின.
இப்படியிருக்க தேவையில்லாமல் ஒரு மதத்தையோ அல்லது ஜாதியையோ புண்படுத்துவது போன்று அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் மதநம்பிகைகளையும் களங்கப்படுத்துவது போன்ற காட்சிகளையும், திரைப்பட பெயராகவும் வைப்பது மிகப்பெரிய குற்றமே. சமிபத்தில் வெளியாகிய திரைப்படமான விஸ்வரூபதில் இஸ்லாமிய மதத்தினரை புண்படுத்துவது போன்ற காட்சியினை அமைத்தனர். இவை அத்திரைப்படத்திற்கு தேவையில்லாத காட்சி. அக்காட்சி இல்லை எனில் அப்படம் ஓடாதோ?.
கமல் போன்ற சிறந்த திரைப்பட கலைஞ்சர்கள் இதுபோன்ற சர்சைக்குரிய காட்சியினை அமைப்பதேன். அதனை தவிர்க்கலாமே. இவர் வியாபார நோக்கில் திரைப்படம் எடுப்பவரல்ல என்றாலும் தனது திரைப்படம் மக்களிடையே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இவருக்கு தெரியாதா?. நாட்டின் ஒற்றுமையிலும், கலாசார பாதுக்காப்பிலும் கமலுக்கு மிகப்பெரிய பொறுப்புண்டு. இவர் மூலம் பெறப்படும் கருத்துக்கள் மக்களை பாதிக்கக்கூடியது. இதனை சிந்தித்து இவர் செயல்படுவது நாட்டிற்கு மிகப்பெரிய நன்மையை தரும்.
ஒரு படத்தின் விளம்பரத்திற்காக மற்றவர்களை புண்படுத்தி திரைப்படங்களையும், அதன் பெயர்களையும் வைப்பவர்கள் தரமற்றவர்கள். அவர்களுக்கு அது வியாபாரம் மட்டுமே அவர்களால் நீண்டநாள் திரை உலகில் இருக்க முடியாது. இவர்கள் திடீர் மழைக்கு வளர்ந்த விஷக் கிருமிகள். இவர்களை இனம்கண்டு அழிப்பது நம்முடைய கடமை. ஆனால் நாட்டில் உயரிய இடத்தில் உள்ளவர்களும் மக்களிடையே அதிக செல்வாக்கு உடையவர்களும் இதுபோன்று செயல்களில் ஈடுப்பட்டால் அது மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும். இதனை சிந்தித்து இவர்கள் மக்களை விழிப்புணர்வு செய்யவும், அவர்களின் ஒற்றுமைக்காகவும், அவர்களிடையே உயரிய சிந்தனை வளரவும் இவர்களின் திரைப்படங்களும் மக்களிடையே இவர்களுக்கு உள்ள செல்வாக்கும் பயன்படவேண்டும்.
நம்போன்ற சாதாரண மக்களின் பொறுப்பு என்ன? ஒரு திரைப்படத்தில் வரும் காட்சியோ, பெயரோ நம்மையும்,நமது ஜாதியினரையும் மற்றும் நமது மதத்தினரையும் இழிவுபடுத்துவதாக இல்லை அவை இழிவுபடுத்துவது வேற்று மதத்தினரை தான் என சமூக பொறுப்பில்லாமல் இருக்ககூடாது. நாளை நம்மை ஒருவன் இழிவுபடுத்துவான். எந்த மத,ஜாதி மக்களை இழிவு செய்து ஒருதிரைப்படமோ அல்லது பிரிவினை சக்தி உருவாகினால் அதனை ஒற்றுமையுடன் சேர்ந்து தடுத்தால் ஒழிய இதுபோன்ற இழிவானவர்கள் வளர்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது கடமையை மட்டும் செய்யாமல் நாட்டை நல்வழிப்படுத்தும் செயலை மேற்கொண்டால் இதுபோன்ற தரமற்றவர்கள் வளர வாய்ப்பில்லை.
நன்றி.
நீதியரசர் திரு கிருபாகரன் |
"மடிசார் மாமி" படத்திலிருந்து |

பலருக்கும் எழ வேண்டிய கேள்விகள்...
ReplyDelete